TN Corona:25 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா..இன்று ஒரே நாளில் 24,418 பேர் பாதிப்பு..

By Thanalakshmi V  |  First Published Jan 29, 2022, 7:59 PM IST

தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இன்று ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 


நேற்று ஒரு நாள் பாதிப்பு 26,533  ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,115 ஆக குறைந்து 24,418 ஆக பதிவாகியுள்ளது. 1,31,684 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 24,418 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 24,418 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 4,508 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 4,508 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,506 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 26 பேரும் தனியார் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,08,350 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே 2,11,863ல் இருந்து 2,08,350 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 27,885 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,57,846 ஆக அதிகரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,448  ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது ஆக 3,309 குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,662 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,614 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 921 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 866 ஆக குறைந்துள்ளது. திருவள்ளூரில் 665 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 640 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,779 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,649 ஆக குறைந்துள்ளது. 

ஈரோட்டில் 1,261 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,198 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 560ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 483 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 443 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 436 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 695 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 625 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 779 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 665 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 1,387 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,264 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 658 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 601 ஆக குறைந்துள்ளது. 

திருச்சி 574,தி.மலை 475, காஞ்சிபுரம் 512, ராணிப்பேட்டை 388,விருதுநகர் 363, விழுப்புரம் 377,கடலூர் 347, தருமபுரி 305, தென்காசி 283,திருவாரூர் 277, தூத்துக்குடியில் 246 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!