புதுச்சேரியில் புதிதாக 855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ‘புதுச்சேரி மாநிலத்தில் 3,465 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 570 பேருக்கும், காரைக்காலில் 172 பேருக்கும், ஏனாமில் 102 பேருக்கும், மாஹேயில் 11பேருக்கும் என மொத்தம் 855 (24.68 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 59 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 182 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,360 பேரும் என மொத்தமாக 12,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.புதிதாக புதுச்சேரி தேத்தாம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர், காரைக்கால் நிரவியைச் சேர்ந்த 67 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,923 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. புதிதாக 2,604 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
undefined
இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 359 (90.95 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 15 லட்சத்து 31 ஆயிரத்து 595 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 6% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட பாசிடிவிட்டி ரேட், 15.88%ல் இருந்து 13.39% ஆகக் குறைந்துள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் ).இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 165 கோடி ஆக உள்ளது.
அதே போல் தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 32,79,284 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,20,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,29,961 ஆக உள்ளது.