NeoCov Virus:மிரட்டும் நியோகோவ் வைரஸ்..மக்கள் அச்சமடைய தேவையில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

By Thanalakshmi V  |  First Published Jan 29, 2022, 2:39 PM IST

நியோகோவ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக மக்கள் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானிகள் தென் அப்பிரிக்காவில் நியோகோவ் (NeoCov) என்ற புதிய வைரஸ் வெளவால்களிடம் பரவி வருவதாக கண்டிப்பிடித்துள்ளனர். இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதே சமயத்தில் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நியோகோவ் வைரஸால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் இறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நியோகோவ் மற்றும் அதன் நெருங்கிய தன்மை கொண்ட PDF-2180-CoV மனிதர்களை பாதிக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது.

கடந்த 2012- 2015 ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் - கோவ் வைரஸ் மற்றும் மனிதர்களிடம் கோவிட்டை ஏற்படுத்திய சார்ஸ் - கோவ் 2 ன் கலவையாக இந்த வைரஸ் காணப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.இந்த வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவவதற்கு,அதில் ஒரு உருமாற்றமே போதும் என தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் நியோ கோவ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 9,39,87,972 பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் எனவும், இந்த முகாம் முலம் மட்டுமே 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் முதல் தவனை தடுப்பூசியை 5,20,29,899 பேரும்(88.19%) இரண்டாம் தவனை தடுப்பூசியை 3,90,21,718 (67.41%) பேரும் செலுத்தி உள்ளனர் எனறு தெரிவித்த அமைச்சர், 15 முதல் 18 வயதுடையோர்களில் இதுவரை 25,91,788 (77.46%) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இதுவரை சுமார் 97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்தாமல் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 100% செலுத்திய 2,669 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் உள்ளன என்றார்.
அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் வழங்க திட்டம் இருந்தது எனவும், இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் கூறினார்.

click me!