TN Corona : நாளுக்கு நாள் குறையும் கொரோனா… 26,533 ஆக குறைந்தது ஒருநாள் தொற்று!!

By Narendran S  |  First Published Jan 28, 2022, 9:26 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,982 குறைந்து 28,533 ஆக பதிவாகியுள்ளது. 1,45,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 26,533 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 26,533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 5,246 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,246 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,460 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 24 பேரும் தனியார் மருத்துவமனையில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,11,863 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2,13,534ல் இருந்து 2,11,863 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 28,156 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,29,961 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,629 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,448 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,696 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,662 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 970 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 921 ஆக குறைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos


திருவள்ளூரில் 697 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 665ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,877 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,779 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 1,314 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,261 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 582 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 560 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 416 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 443 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சையில் 749 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 695 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 842 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 779 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 1,431 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,387 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 728 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 658 ஆக குறைந்துள்ளது. தி.மலை 555, காஞ்சிபுரம் 530, விருதுநகர் 400, தேனி 290, விழுப்புரம் 412 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!