NeoCov Virus: அச்சமூட்டும்’நியோகோவ்’வைரஸ்.. விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு ..

By Thanalakshmi V  |  First Published Jan 28, 2022, 9:56 PM IST

சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நியோகோவ் கொரோனா வைரஸ் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
 


வுஹான் ஆராய்ச்சியாளர்கள் குழு தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களில் நியோகோவ் என்ற புதிய வகையான கொரோனா வைரஸைக் கண்டறிந்துள்ளது. ஒரு ஆய்வில், இந்த வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். "ஆய்வில் கண்டறியப்பட்ட வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது கூடுதல் ஆய்வு தேவைப்படும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்கள் என்பது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வரையிலான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும்.
மனிதர்களுக்கு ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு மூல காரணம் விலங்குகள் என்று அந்த அமைப்பு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "கொரோனா வைரஸ்கள் பெரும்பாலும் பல வைரஸ்களின் இயற்கையான நீர்த்தேக்கமாக அடையாளம் காணப்பட்ட வெளவால்கள் உட்பட விலங்குகளில் காணப்படுகின்றன, " என்று உலகளாவிய அமைப்பு தெரிவித்து வருகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

நியோகோவ் எனும் வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வளர்ந்து வரும் ஜூனோடிக் வைரஸ்களை சமாளிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக உலக அமைப்பு கூறிகின்றன. சீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு WHO நன்றி தெரிவித்துள்ளது.

ஆய்வின்படி, கோவிட்-19 வைரஸைப் போலவே நியோகோவ் மனித உயிரணுக்களில் ஊடுருவ முடியும். "நியோகோவ் மனிதர்களுக்கு ஆபத்தானதாக மாறுவதில் இருந்து ஒரே ஒரு பிறழ்வு மட்டுமே உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் BioRxiv இல் வெளியிடப்பட்ட மற்றுமொரு ஆய்வில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க போடப்படும் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசிகள் எதுவுமே இந்த நியோகோவ் வைரஸிலிருந்து பாதுகாப்பு தராது. ஏனெனில், அது முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது  மெர்ஸ்-கோவ் (MERS-CoV) வைரஸ்  மற்றும்  சார்ஸ் - கோவ் (SARS- CoV) வைரஸ்களின் கலவையாக இருப்பதாக கூறுகின்றனர். NeoCoV எனும் புதிய வைரஸின் , நெருங்கிய தொடர்பு கொண்ட  பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

click me!