Corona TN: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா... ஒரே நாளில் 28,515 பேருக்கு தொற்று உறுதி!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 9:14 PM IST
Highlights

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 29,976 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,461 குறைந்து 28,515 ஆக பதிவாகியுள்ளது. 1,46,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28,515 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 28,515 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 5,591 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,591 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 28,512 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் என 28,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 53 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,412 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 22 பேரும் தனியார் மருத்துவமனையில் 31 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,13,534 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2,13,692ல் இருந்து 2,13,534 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 28,620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,01,805 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,740 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,629 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,883 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,696 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 1,035 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 970 ஆக குறைந்துள்ளது.


திருவள்ளூரில் 726 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 697 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,787 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,877 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 1,302 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,314 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 592 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 582 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 612 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 416 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 805 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 749 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 944 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 842 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 1,457 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,431 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 765 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 728 ஆக குறைந்துள்ளது. தி.மலை 592, காஞ்சிபுரம் 539, விருதுநகர் 489, தேனி 360, விழுப்புரம் 460 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!