Omicron: ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களை தாக்கும் ஒமைக்ரான்..ஆய்வில் அதிர்ச்சி..

By Thanalakshmi V  |  First Published Jan 27, 2022, 4:13 PM IST

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வில் ஏற்கனவே கொரோனா பாதித்த நபர்களுக்கு மூன்றில் இரண்டு பேர் எனும் விகிதத்தில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 


ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வில் ஏற்கனவே கொரோனா பாதித்த நபர்களுக்கு மூன்றில் இரண்டு பேர் எனும் விகிதத்தில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடருக்கு மத்தியில் ஒமைக்ரான் என்ற வார்த்தை மேலும் அச்சமூட்டி,தற்போது அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதி அடைந்தாலும் கூட இன்னும் ஒமைக்ரான் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒமைக்ரான் பாதிப்பு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்கனவே கொரோனா பாதித்ததால் ஏற்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடையவில்லையா என்பது குறித்த ஆய்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்,ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யவர்களில் 65 சதவீதத்தினர் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் என்பது தான் அது. அதாவது ஒமைக்ரான் பாதித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு முன்னதாக கொரோனா பாதித்தவர்கள் எனும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.அதாவது இம்பெரியல் லண்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வின்  தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேவேளையில் இரண்டாவது முறை அவர்களுக்கு பரிசோதனை செய்யும் போது உண்மையில் அவர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டதா அல்லது ஏற்கனவே பாதித்த கொரோனாவின் மிச்சங்கள் தற்போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை கருவிகள் மூலம் புதிய பாதிப்பாக காட்டப்படுகிறதா என்பதையும் சோதனைக்குள்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவந்தநிலையில், நேற்று முதல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணி நிலரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் 2,55,874 பேருக்கும், நேற்று 2,85,914 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்று, 2,86,384 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.

click me!