TN Corona : தமிழகத்தில் குறையும் கொரோனா… 30,215ல் இருந்து 30,055 ஆக குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை!!

By Narendran S  |  First Published Jan 25, 2022, 9:30 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,215 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 160 குறைந்து 30,055 ஆக பதிவாகியுள்ளது. 1,48,469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,055 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,055 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 6,241 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,241 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,039 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 16 பேர் என 30,055 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 22 பேரும் தனியார் மருத்துவமனையில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,11,270 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2,06,484ல் இருந்து 2,11,270 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25,221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,45,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,786 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,763 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,742 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,737 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 1,236 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,217ஆக குறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos


திருவள்ளூரில் 746 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 736 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,504 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,490 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 1,199 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,229 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 616 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 605 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 526 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 662 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 1,117 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,104 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 983 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 923 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 1,089 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,087 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 791 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 783 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!