TN Corona : தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… 30,580ஆக சரிந்தது தினசரி எண்ணிக்கை!!

By Narendran S  |  First Published Jan 24, 2022, 8:43 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,580 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 365 குறைந்து 30,215 ஆக பதிவாகியுள்ளது. 1,51,217 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,215 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,215 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 6,296 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,296 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,208 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் என 30,215 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,264 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 21 பேரும் தனியார் மருத்துவமனையில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,06,484 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2,00,954ல் இருந்து 2,06,484 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 24,639 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,20,457 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,912 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,786 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,841 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,742 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 1,220 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,199 ஆக குறைந்துள்ளது.

Latest Videos

undefined

திருவள்ளூரில் 751 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 746 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,507 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,504 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 1,220 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,199 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 622 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 616 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 608 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 526 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 1,123 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,117 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 1,010 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 983 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 1,074 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,089 ஆக அதிகரித்துள்ளது. நாமக்கல்லில் 695 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 791 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருச்சி 742, தி.மலை 534, விருதுநகர் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!