corona India:பிப்.,15 க்கு பிறகு கொரோனா பாதிப்பு குறையும்.. மத்திய அரசு தரப்பில் வெளியான தகவல்..

By Thanalakshmi V  |  First Published Jan 24, 2022, 9:30 PM IST

நாட்டில் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குப் பின் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்குமென்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் 3.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல 439 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அளவில் 22,49,335 பேர் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

Latest Videos

undefined

அதே போல நாட்டில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 17.78%ல் இருந்து 20.75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக கர்நாடகாவில் 50,210 பேரும், மகாராஷ்டிராவில் 40,805 பேரும்,டெல்லியில் 9,97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிப்.15ம் தேதிக்குப் பிறகு நாட்டில் புதிய கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நாட்டில் சில மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பானது குறையத் தொடங்கி, கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது.

கொரோனா மூன்றாம் அலையின் அதிதீவிர தாக்கத்தை, கொரோனா தடுப்பூசி குறைத்துள்ளது என்றும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும், அதன்படி, நாட்டில் 74 சதவீத பெரியவர்கள், முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதுமட்டுமன்றி, அதிக பரவும் தன்மை கொண்டு இருக்கும் ஒமைக்ரான் திரிபு கொரோனாதான் அனைத்திலும் கடைசி கொரோனா திரிபாக இருக்குமென நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தால், அதுவே ஆபத்துக்கு வழிவகுக்கும். ஆகவே இந்த கொரோனா பெருந்தொற்றின் இறுதி ஆட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோமென நினைப்பது தவறு. கடந்த 9 வாரங்களுக்கு முன்னர்தான் ஒமைக்ரான் திரிபு உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த குறுகிய காலத்துக்குள் கிட்டத்தட்ட 80 மில்லியன் புதிய கொரோனா தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள். 80 மில்லியன் என்பது, 2020-ம் ஆண்டு பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

click me!