TN Corona : சற்றே ஆறுதல்… 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு… 29,976 பேருக்கு கொரோனா!!

By Narendran S  |  First Published Jan 26, 2022, 8:44 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,055 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 79 குறைந்து 29,976 ஆக பதிவாகியுள்ளது. 1,50,931 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,976 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 29,976 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 5,973 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,973 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 29,958 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 18 பேர் என 29,976 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,359 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 21 பேரும் தனியார் மருத்துவமனையில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,13,692 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2,11,270ல் இருந்து 2,13,692 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 27,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,73,185 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,763 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,740 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,737 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,883 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,217 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,035 ஆக குறைந்துள்ளது.

Latest Videos


திருவள்ளூரில் 736 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 726 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,490 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,787 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 1,229 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,302 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 605 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 592 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 662 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 612 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 1,104 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 805 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 923 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 944 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 783 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 765 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் 732 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 684 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 793 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 765 ஆக குறைந்துள்ளது. தி.மலை 602, விருதுநகர் 499, ராணிப்பேட்டை 445, தேனி 387, விழுப்புரம் 479 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

click me!