கொரோனா தடுப்பூசிக்கு பதில்…. வெறிநாய்க்கடி தடுப்பூசி… இது மகாராஷ்டிரா கூத்து…

By manimegalai a  |  First Published Sep 29, 2021, 7:37 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

எப்படியாவது கொரோனாவை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்பதில் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகள் முனைப்புடன் இருக்கின்றன. அதற்கான பல கட்ட நடவடிக்கைகளும எடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருக்கிறது. இந்த கூத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் நடந்திருக்கிறது.

அம்மாநிலத்தில் தானே நகராட்சிக்குட்டது கல்வா என்ற பகுதி. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் இப்படிப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளது. ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்த சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்றபடி இருப்பதை அவர் கண்டு உள்ளார். மண்டைக்குள் பல்பு எரிய இவரும் கூட்டத்துடன் ஐக்கியமாகி வரிசையில் நின்றிருக்கிறார். அங்கு வந்த நர்ஸ் ஒருவர் ராஜ்குமார் யாதவ்வுக்கு ஊசி போட்டுவிட்டுள்ளார்.

அதன் பின்னர் தான் அவருக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி அல்ல… வெறிநாய்க்கடி தடுப்பூசி என்பது. அலறி ஓடிய அவருக்கு நடந்த சம்பவம் பற்றிய தகவல் மேலதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட நர்சை சஸ்பென்ட் செய்திருக்கிறது

சுகாதாரத்துறை. வெறிநாய்க்கடி தடுப்பூசிக்கு ஆளான ராஜ்குமார் யாதவ் நடவடிக்கைகளையும் மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

click me!