வர்லாம்… வா… வர்லாம், வர்லாம் வர்லாம் வா… விமான சேவைக்கு ஓகே சொன்ன கனடா

By manimegalai a  |  First Published Sep 26, 2021, 8:56 PM IST

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமான சேவைக்கு கனடா ஓகே சொல்லி இருக்கிறது.


ஒட்டாவா: இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமான சேவைக்கு கனடா ஓகே சொல்லி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா காலம் என்பதால் இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்துக்கு கனடா அரசு தடை விதித்து இருந்தது. இந்த தடையை கனடா அரசு நீக்கியதை அடுத்த இந்தியாவில் இருந்து விமானங்கள் கனடா செல்லும் சூழல் எழுந்துள்ளது.

இது குறித்து கனடா அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: கொரோனா நிலையை கவனத்தில் கொண்டு இவ்வார தொடக்கம் முதலே இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமான சேவை தொடங்கும்.

இந்தியாவில் இருந்து கனடா வர விரும்புவோர் விமான பயணம் தொடங்கும் 18 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ் டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

click me!