அதிபரையே வெளியே துரத்திய அமெரிக்கா… என்ன காரணம் தெரியுமா…?

By manimegalai aFirst Published Sep 25, 2021, 7:57 AM IST
Highlights

பிரேசில் அதிபரை ஓட்டலில் நுழைய விடாமல் அமெரிக்க ஊழியர்கள் திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.

வாஷிங்டன்: பிரேசில் அதிபரை ஓட்டலில் நுழைய விடாமல் அமெரிக்க ஊழியர்கள் திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.

2வது ஆண்டாக உலக நாடுகளை ஒரு உருட்டி வருகிறது கொரோனா என்னும் கொடிய தொற்று. நாள்தோறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் தான் கொரோனாவால் சேதாரம் அதிகம். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கரை கோடியை நெருங்கி வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். கொரோனாவால் ஒட்டு மொத்தமாக பலியானவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துவிட்டது.

 கொரோனாவின் கொடிய தாக்கத்தில் இருந்து மக்களை காக்க அந்நாட்டு அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதோடு அதனை கட்டாயப்படுத்தியும் வருகிறது.

இந் நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபரை அந்நாட்டில் உள்ள ஓட்டலில் ஊழியர்கள் உள்ளே விட மறுத்துவிட்டனர். காரணம் அவர் கொரோனா தடுப்பூசி போடாதது தான்.

அமெரிக்காவில் அமைச்சர்களுடன் அதிபா போல்சரோனோ பீட்சா உணவகத்துக்கு சென்றார். அப்போது ஊழியர்கள் அவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளீர்களா என்று வினவியிருக்கின்றனர். இவரோ இல்லை என்று கூற உள்ளே அனுமதிக்க மறுத்து வெளியே அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்று ஓட்டல் ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

click me!