கொரோனா சிகிச்கைக்கு 2 மருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டு அவற்றை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் எனறு ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
டெல்லி: கொரோனா சிகிச்கைக்கு 2 மருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டு அவற்றை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் எனறு ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
undefined
கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. நாள்தோறும் உலக நாடுகளை பாதித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிட்டாலும் நாள்தோறும் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
கொரோனா சிகிச்சை நேரத்தில் அதாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராத தருணத்தில் ரெம்டெசிவிர், ஐவர்மெக்டின் உள்ளிட்ட சில மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.
இந் நிலையில் கொரோனா சிகிச்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மருநத்துகளில் 2 பெயர்களை குறிப்பிட்டு அவற்றை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் எனறு ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. ஹைட்ரோகுளோரோகுயின் ஐவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.
ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் மூலம் வேறு விதமான பிரச்னைகள் உருவாகின்றன. கொரோனா பலிகளை மேற்கண்ட 2 மருந்துகளும் கட்டுப்படுத்தவில்லை என்பதால் பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.