XBB.1.16.1 புதிய கொரோனா வைரஸ்.. அதிகரிக்கும் பரவல்.. மீண்டும் கலக்கத்தில் இந்தியா!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று முதல் அலை, இரண்டாவது அலை என அடுத்தடுத்து பரவி உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதில், லட்சக்கணக்காளோர் உயிரிழந்தனர்.


தற்போது உள்ள XBB.1.16 வைரஸ் உருமாற்றம் அடைந்து T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1 எனும் புதிய வைரஸ் உருவாகியுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று முதல் அலை, இரண்டாவது அலை என அடுத்தடுத்து பரவி உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதில், லட்சக்கணக்காளோர் உயிரிழந்தனர். பலரின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்குள் மக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். இருப்பினும் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டதா? என்றால் இல்லை என்பதே உண்மை.

Latest Videos

இந்நிலையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மாதிரிகள் உருவாகி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக வந்திருப்பது XBB.1 பிரிவை சேர்ந்த XBB.1.16 வைரஸ் ஆகும். இதன் பரவல் வேகமாக இருப்பதால் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி நிலையில் ஸ்பைக் புரதத்தில் உருமாற்றம் அடைந்து T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1எனும் புதிய உபவைரஸ் உருவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 113 பேருக்கு அதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் ஒரு நாளில் 3,595 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 242 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,744 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 1086 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 112 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேரும், செங்கல்பட்டில் 26, கன்னியாகுமரி 26,  கோவை 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

click me!