மறுபடியும்… அக்.10ம் தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்… சான்சை மிஸ் பண்ணிடாதீங்க…

By manimegalai a  |  First Published Sep 29, 2021, 8:15 AM IST

வரும் 10ம் தேதி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை: வரும் 10ம் தேதி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் வாரம்தோறும் தற்போது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

இந் நிலையில் வரும் 10ம் தேதி தமிழகத்தில் மீண்டும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:

2011ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் வருமுன் காப்போம் என்ற திட்டம் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 3 வாரங்களாக நடத்தப்பட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் இலக்கை தாண்டி கூடுதல் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

வரும் 10ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 4வது முறையாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். கொரோனா கால ஒழிப்பில் மிக சிறப்பாக பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை மக்களை தேடி மருத்துவ திட்டத்துக்கு நியமிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

click me!