இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! 9 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சியில் மக்கள்

By Ajmal KhanFirst Published Apr 27, 2023, 12:37 PM IST
Highlights

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறி இறங்கி வரும் கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் அதிகரித்த கொரோனா

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் மக்கள் இரண்டு ஆண்டுகள் முடங்கி கிடந்தனர். கடந்த ஒரு ஆண்டாகத்தான் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் மக்களை மீண்டும் அச்சப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500 என்ற விகிதத்தில் பதிவாகி வந்தநிலையில்,

தற்போது 12 ஆயிரத்தை கடந்து சென்றது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பாதிப்பு படிப்படியாக குறைந்து 6 ஆயிரம் என்ற அளவிற்கு வந்தது. இந்தநிலையில் நேற்று 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,

சூடான் போர் வாழ்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.! ஒரு செட் துணியுடன் திரும்பியுள்ளோம்-தமிழர்கள் வேதனை

தமிழகத்தில் 421 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,967- ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 57 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி சென்ற நிலையில்,  தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 421 ஆக பதிவாகி உள்ளது. இருந்த போதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதை நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.

click me!