corona : உலக நாடுகள் அதிர்ச்சி.. மீண்டும் மிரட்டும் கொரோனா..ஒராண்டுக்கு பிறகு சீனாவில் பதிவான கொரோனா பலி

By Thanalakshmi V  |  First Published Mar 19, 2022, 3:18 PM IST

corona: சீனாவில் ஓராண்டுகளுக்கு பிறகு கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் புது திரிபு அங்கு வேகமாக பரவுவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் திடீரென்று அதிகரித்துள்ளது.


வூகான் நகரம்:

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை கொரோனா எனும் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றங்கள் அடைந்து உலகை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது. ஆல்பா, பீட்டா, காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான்,டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் உருமாற்ற அடைந்து கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாவது அலையில் நாடே ஸ்தம்பித்து போனது என்றே சொல்லலாம். இதனிடையே டெல்டா அலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்த நிலையில், ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக இருந்தது.  ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை.

மேலும் படிக்க: WHO:கொரோனா பரிசோதனையை குறைக்காதீங்க..மீண்டும் வேகமெடுக்கும் ஒமைக்ரான்.. வார்னிங் செய்த உலக சுகாதார அமைப்பு..

நியோகோவ் வைரஸ்:

இந்நிலையில் நியோகோவ் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் வவ்வாலிகளிடம் பரவுவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.  இந்த வைரஸ் டந்த மெர்ஸ் - கோவ் மற்றும்  சார்ஸ் - கோவ் 2 ன் கலவையாக இருப்பதாக சொல்லப்பட்டது. வூஹான் பல்கலை மற்றும் சீன உயிர் இயற்பியல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி, இந்த வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவவதற்கு,அதில் ஒரு உருமாற்றமே போதும் என தெரிவிக்கப்பட்டது. இதுக்குறித்தான அடுத்தக்கட்ட ஆய்வுகளை பல்வேறு உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன.

ஒமைக்ரான் திரிபு:

இந்நிலையில் கொரோனா வைரஸின்  தாய் வீடான சீனாவின் அதன் பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 15,000 எட்டியிருந்தது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. `கொரோனா பாதிப்பு பூஜ்யமாக வேண்டும்’ என்ற கொள்கையை பின்பற்றி வரும் சீனா, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்:

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்து வருகிறது.அதன்படி லாங்ஃபேங், சென்ஸென், ஷாங்காய் என பல நகரங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஒமைக்ரான் வைரஸின் புதிய திரிபு  BA.2 SUB VARIANT எனும் வைரஸ் மனிதர்களிடையே தற்போது பரவி வருகிறது. இது ஒமைக்ரானை விட ஒன்றரை மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதுவே சீனாவில் தொற்று எண்ணிக்கை உயர காரணம் எனத் தெரிய வந்துள்ளது. 

கொரோனா பலி:

இதனிடையே சீனாவில் பல மாதங்களுக்கு பிறகு,  கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று கொரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் படிக்க: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தொடருங்கள்... மத்திய அரசு அறிவுறுத்தல்!!

click me!