WHO:கொரோனா பரிசோதனையை குறைக்காதீங்க..மீண்டும் வேகமெடுக்கும் ஒமைக்ரான்.. வார்னிங் செய்த உலக சுகாதார அமைப்பு..

By Thanalakshmi V  |  First Published Mar 18, 2022, 3:41 PM IST

WHO: ஒமைக்ரான் மற்றும் அதன் பி.ஏ. 2  வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால், பல்வேறூ நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 


உலகம் முழுதும் கடந்த 7ம் தேதி முதல் 13 வரையிலான ஒரு வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 1.1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 8 சதவீதம் அதிகமாகும். இதேபோல் கொரோனா உயிரிழப்புகளை பொறுத்தவரை கடந்த வாரம் மட்டும் 43 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கை:

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றிற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 12 சதவீதமும் உயிரிழப்புகள் 14 சதவீதமும் அதிகரித்துள்ளது. மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் 38 சதவீத அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.ஒமைக்ரான் வகை வைரஸ் மற்றும் அதன் பி.ஏ. 2 ரக வைரஸ் காரணமாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது என்று தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்று பரவலுக்கு  வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான் முதல் காரணம் என்று கூறியுள்ளது.

கொரோனா பரிசோதனை குறைப்பு:

இதனிடையே சில நாடுகளில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது. எனவே உலக நாடுகள் விழிப்புடன் இருந்து, பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், நேற்று முன்தினம் மட்டும், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறும் உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தென் கொரிய அரசு கவனம் செலுத்தி வருவதால், உயிரிழப்பு குறைவாக உள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 3,997 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தற்போது 29,181 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரை 180.97 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 15.77 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் படிக்க: south korea covid:தென் கொரியாவில் கைமீறிச்செல்லும் கொரோனா தொற்று: ஒரேநாளில் 6 லட்சம் பேர் பாதிப்பு

click me!