புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. புதிதாக தொற்று பாதிப்பு ஏதும் பதிவாகாத நிலையில் ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளான 14 பேரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. புதிதாக தொற்று பாதிப்பு ஏதும் பதிவாகாத நிலையில் ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளான 14 பேரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு நிலவரம்:
undefined
புதுச்சேரியில் இன்று 410 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. எனவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பூஜ்ஜியம் ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனாவால் இருந்து இன்று ஒருவர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளார். இதனால் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 790 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர்.
சிகிச்சையில் யாருமில்லை:
புதுச்சேரியில் இதுவரை கொரோபா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 766 ஆக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. புதிதாக தொற்று பாதிப்பு ஏதும் பதிவாகாத நிலையில் ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளான 14 பேரும் வீட்டு தனிமையில் உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெறுபவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… 800க்கும் கீழ் குறைந்தது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை!!
90 சதவீத பேருக்கு தடுப்பூசி:
இதனிடையே புதுச்சேரி முழுவதும் இதுவரை 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி (கோர்பேவாக்ஸ்) செலுத்தும் பணியை, தொடங்கிய வைத்த அவர், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்கள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றார்.
12- 14 வயதோருக்கான தடுப்பூசி:
மேலும் மாநிலத்தில் இதுவரை சுமார் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் 15 வயது முதல் 18 வயது வரை யிலான மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் போடப்படுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும் 15- 18 வயதோருக்கான இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சட்டசபை கூடும் போது அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க: இந்தியாவில் 4வது கொரோனா அலை? உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தகவல்!!