10 லட்சம் வரை பாதிப்பு ஏற்படும்.. பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சம் தொடும்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..

Published : Jan 07, 2022, 08:48 PM IST
10 லட்சம் வரை பாதிப்பு ஏற்படும்.. பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சம் தொடும்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று ஆய்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது.  

இந்தியாவில் கொரோனா பரவல் ஏறக்குறைய முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்ததில் இருந்து வேகம் எடுத்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் கடைசி நாட்களில் ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில்  இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை எப்போது முடிவிற்கு வரும் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை பெங்களூருவிலுள்ள ஐஐஎஸ்சி (Indian Institute of Science)மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் சேர்ந்து நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி விகிதம் பொருத்து மாறலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

அதன்படி டெல்லியை பொருத்தளவில் ஜனவரி மாத நடுப்பகுதியில் அல்லது மூன்றாவது வாரத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் போது ஒருநாள் பாதிப்பு 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் உச்சத்தை தொட்ட பிறகு கொரோனா பரவல் மிகவும் வேகமாக குறைய தொடங்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்று, தடுப்பூசிகள் ஏற்படுத்திய ஆக்கப்பூர்வமான விளைவுகள், மக்கள் மத்தியில் பாதிப்பு எளிதாக பரவுத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தின் Covid 19 tracker என்ற ஆய்வும் உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் இந்தாண்டு கொரோனா பரவல் மிகவும் குறைவான நாட்களில் உச்சத்தை தொட்டு பின்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு பரவலை போல் இம்முறை கொரோனா பரவல் இந்தியாவில் சில மாதங்கள் நீடிக்காது என்று வல்லுநர்கள் அந்த ஆய்வில் கூறியிருந்தனர். இதேபோல் ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்விலும் இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி உச்சத்தை தொடும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்