Corona Chennai : நேற்று 4000, இன்று 7000; எகிறும் தமிழக கொரோனா… சென்னையில் மட்டும் 3700… ரெட் அலர்ட்!!

By Narendran S  |  First Published Jan 6, 2022, 8:14 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 4,862 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,121 அதிகரித்து 6,983 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 2,481 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 6,983 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 44 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,825 ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

அரசு மருத்துவமனையில் 7 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து 721 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 688 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 596 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 816 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 2019 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 444 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 259 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 184 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 223 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 127 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 185 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் 123 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 132 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 87 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், ராணிபேட்டையில் 67 பேருக்கும், மதுரையில் 60 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 7 பேருக்கு மட்டும் இன்று கொரோனா தொற்று உறுதியாகி, மிக குறைந்த பாதிப்பு பதிவான மாவட்டமாக உள்ளது.

click me!