வைரஸ் தான் இயற்கையான தடுப்பூசி..?! ஒமைக்ரானை கொண்டாடும் நாடுகள்.. மருத்துவர்கள் சொல்வது என்ன..?

By Thanalakshmi V  |  First Published Jan 3, 2022, 4:29 PM IST

உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்  ஒமைக்ரான் தொற்றினால் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் இது இயற்கையான தடுப்பூசி என்று பல நாடுகளில் கருத்துகள் முன்வைக்கபடுகின்றன.
 


ஒமைக்ரான் தொற்றினால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதாக அண்மையில் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன். மேலும் நோய் பாதிப்பு அறிகுறிகளும் டெல்டாவை ஓப்பிடும் போது மிதமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் முந்தைய அலையை விட குறைவாக இருக்கிறது. இதனால் ஒமைக்ரான் டெல்டாவிட வேகமாக பரவும் நிலையில் அந்த வைரஸ் மக்களுக்கு நோய் எதிர்பாற்றலையே கொடுக்கிறது என்று பல நாடுகளில் மருத்துவர்கள் கூறிகின்றனர்.மேலும் டெல்டா என்ற மோசமான வகை கொரோனாவை வீழ்த்தி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி வழங்க வந்த "வீக்" கொரோனாவாக ஓமைக்ரான் வகை கொரோனா பார்க்கப்படுகிறது. இந்த கருத்து உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் இதை தவறு என்று கூறி உள்ளனர். இப்படி நினைப்பது மிக தவறான கருத்து என்றும் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இது தொடர்பாக தீநுண்மியியல் நிபுணர் ஷாகித் ஜமில், ஒமைக்ரான் பாதிப்பு இயற்கை தடுப்பூசி செயல்படும் என்ற ஆபத்தான கருத்தை பொறுபற்ற சிலர் பரப்பி வருகின்றனர். ஒமைக்ரான் வகை தொற்றை குறித்து தற்போது வரை குறைந்த அளவிலான ஆய்வுகளே நடத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பின் நீண்ட கால விளைவுகள் குறித்து இந்த கருத்து உள்கொள்ளவில்லை. முக்கியமாக இந்தியாவில் நீரிழிவு நோய், காற்று மாசுபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிடவை அதிக அளிவில் உள்ளன. இந்நிலையில் போதிய விவரங்கள் இல்லாமல் தொற்று பாதிப்பு குறித்து தகவல்கள் பரப்புவது சரியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.  மேலும் உஜாலா சிக்னஸ் குழும மருத்துவத்தின் நிறுவனர் சச்சின் பஜாஜ் அளித்த பேட்டியில், இந்த ஒமைக்ரான் சமயங்களில் நீண்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது.  ஒமைக்ரான் தொற்று சிறுநீரகம், மூளை, கல்லீரல் என முக்கிய உறுப்புகளில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சிலருக்கு 6 மாதங்கள் வரை கூட உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன். இதனால் வரும் நாட்களில் என்ன பாதிப்பு ஏற்படும், என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று கூற முடியாது. இதனால் இப்போதே கவனமாக இருக்க வேண்டும். இதை இயற்கையான தடுப்பூசி என்று கூற முடியாது. அந்த வார்த்தை பதத்தை பயன்படுத்த முடியாது. பின்விளைவுகள் எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொற்றுநோயியல் நிபுணரும், இந்தியா சுகாதார அறகட்டளையின் பேராசிரியரும் கிரிதர் ஆர்.பாபு, ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது தடுப்பூசியாக செயல்படாது. மக்கள் இதுபோன்ற வதந்திகளை ஒருபோதும் நம்ப கூடாது எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.ஆனால் ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, மருத்துவ நிபுணர் யாஷ் ஜாவேரி ஆகியோர் கூறுகையில் ஒமைக்ரான் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மந்தை எதிர்ப்புசக்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு விதமான கலப்பு எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் ஒமைக்ரான் என்பதை இயற்கையான வேக்சின் என்று அழைக்கலாம் என்று இதுவரை இந்தியாவை சேர்ந்த எந்த ஆராய்ச்சியாளரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!