கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.
undefined
இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !
இந்நிலையில், கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டில் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை.
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலால் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். வரும் காலங்களில் பண்டிகை வர உள்ளதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..தைரியம் இருந்தால் இதற்கு போராட்டம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி !