உன்னோட படத்துல எனக்கு மியூசிக் டைரக்டர் சான்ஸ் குடுப்பியா? என்று இளையராஜாவே கேட்டு வாங்கிய சான்ஸ் இது!

By vinoth kumarFirst Published Oct 23, 2018, 11:47 AM IST
Highlights

இனி முழுநேரத் தயாரிப்பாளராவது என்று முடிவெடுத்தாரோ என்னவோ ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. தனது ஒய்.எஸ்.ஆர் பட நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக இயக்குநர் இளனின் படத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த யுவன் நேற்று தனது அப்பா இசையமைக்கும் அடுத்த படத்தயாரிப்பை அறிவித்தார்.

யெஸ்...யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் அவருடைய தந்தை இளையராஜாவே இசையமைக்கவுள்ளார். யுவனின் முதல்பட ஆடியோ வெளியீட்டுவிழாவில்,’ உன்னோட அடுத்த படத்துலயாவது எனக்கு மியூசிக் டைரக்டர் சான்ஸ் குடுப்பியா? என்று ராஜாவே கேட்டு வாங்கிய சான்ஸ் இது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா காம்போவில் உருவாகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் புதிய படத்துக்குத் தயாராகியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. அதன்படி யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தற்போது இணைந்துள்ளார். 

இந்தப்படத்தில் தன்னை சினிமாவுக்கு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய சீனு ராமசாமியுடன் நான்காவது முறையாக இணைகிறார் விஜய் சேதுபதி. சீனுவின் இப்படத்திற்கு டிசம்பர் முதல் கால்ஷீட் கொடுத்துள்ள விஜய்சேதுபதி தற்போது அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் தாய்லாந்தில் அஞ்சலியுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்.

click me!