ப்ரித்திகா மேனனுக்கு சேதாரம் எதுவும் நடக்கவில்லை.... ஆதாரம் காட்டும் மம்பட்டியான்!

Published : Oct 23, 2018, 10:21 AM IST
ப்ரித்திகா மேனனுக்கு சேதாரம் எதுவும் நடக்கவில்லை.... ஆதாரம் காட்டும் மம்பட்டியான்!

சுருக்கம்

பெண் புகைப்படக்கலைஞர் பிரித்திகா மேனனுக்கு தன்னால் சேதாரம் எதுவும் நடக்கவில்லை என்று மிகப்பரிதாபமான ஆதாரத்துடன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் மம்பட்டியான் தியாகராஜன்.

பெண் புகைப்படக்கலைஞர் பிரித்திகா மேனனுக்கு தன்னால் சேதாரம் எதுவும் நடக்கவில்லை என்று மிகப்பரிதாபமான ஆதாரத்துடன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் மம்பட்டியான் தியாகராஜன். 

நள்ளிரவில் பிராந்தி பாட்டிலுடன் தனது ரூமைத்தட்டி மம்பட்டியான் தியாகராஜன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று அவரது ’பொன்னர் சங்கர்’ படத்தில் பணியாற்றிய பெண் புகைப்படக்கலைஞர் பிரித்திகா மேனன் ‘மி டு’ போட்டிருந்தார். அதைக்கண்டு வெகுண்டெழுந்த தியாகராஜன் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாத் லேப்பில் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

இச்சந்திப்பில் பத்திரிகையாளர் அனைவரும் குழம்பும்படியாக ‘பொன்னர் சங்கர்’ படத்தில் வில்லன்களுடன் இரண்டு பிரசாந்த்களும் மோதும் சுமார் 10 நிமிட சண்டைக்காட்சி ஒன்றை ஓடவிட்டார். பின்னர் மைக் முன்னே ஆழ்ந்த துக்க ரியாக்‌ஷனுடன் வந்த தியாகராஜன்,’ இப்போது பார்த்தீர்களே இந்த சண்டைக்காட்சி எடுக்கப்பட்டபோதுதான் என் மீது புகார் கூறிய பிரித்திகா மேனன் பணியாற்றினார். 

இதில் மும்பையிலிருந்து வந்த ஸ்டண்ட் கலைஞர்கள், மேக்-அப், காஷ்ட்யூமர்கள், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினார்கள். இப்படத்தின் இயக்குநரும் நானே தயாரிப்பாளரும் நானே. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் படப்பிடிப்பு நடக்கும்போது நான் எப்படி அந்தப்பெண்ணின் அரையைத் தட்டியிருக்கமுடியும்?’ என்று ஒரு பரிதாபமான கேள்வி கேட்டார். 

பத்திரிகையாளர்கள் மத்தியிலிருந்து நோ ரியாக்‌ஷன். பின்னர் தொடர்ந்த தியாகராஜன்,’ சுமார் 50 ஆண்டுகாலமாக நான் திரையுலகில் அரும்பாடுபட்டு சம்பாதித்த பெயரை இப்படி போகிற போக்கில் அசிங்கப்படுத்தினால் எப்படி? மான நஷ்ட வழக்கு போடுவதற்காக இரு தினங்களாக அந்தப்பெண்ணின் முகவரி தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிக்கவில்லை’ என்று முடித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?