வைரமுத்துவுக்கு இனி வாய்ப்பு கிடையாது! ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி முடிவு!

Published : Oct 23, 2018, 10:11 AM ISTUpdated : Oct 24, 2018, 12:34 AM IST
வைரமுத்துவுக்கு இனி வாய்ப்பு கிடையாது!  ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி முடிவு!

சுருக்கம்

தான் இசை அமைக்கும் படங்களில் இனி ஒரு போதும் வைரமுத்துவுக்கு பாட்டெழுத வாய்ப்பு கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்துள்ளார். 

தான் இசை அமைக்கும் படங்களில் இனி ஒரு போதும் வைரமுத்துவுக்கு பாட்டெழுத வாய்ப்பு கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்துள்ளார். சுவிட்ஜர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற போது தன்னை தனியாக ஓட்டல் ரூமுக்கு வருமாறு வைரமுத்து அழைத்ததாக சின்மயி புகார் கூறினார். இதனை தொடர்ந்து பல்வேறு இளம் பெண்களும் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் புகார்களை கூற ஆரம்பித்தனர்.

 

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே பல்வேறு பெண்களிடம் வைரமுத்து வரம்பு மீறியதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பேசிய வைரமுத்துவுன் சகோதரியான ரைஹானா, தன்னிடமும் மூன்று பெண்கள் வைரமுத்து குறித்து புகார் கூறியதாக தெரிவித்திருந்தார். ரஹ்மான் பெயரை வைரமுத்து தவறாக பயன்படுத்துவது குறித்து தனக்கு தெரியும் என்றும் ரைஹானா கூறியிருந்தார். இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் மீ டூ சர்ச்சை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 

தனது வொர்க் பிளேசில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் எப்போதும் நிலவும் என்று ரஹ்மான் கூறியுள்ளார். சில தேவையற்ற விஷயங்களில் எனது பெயரும் அடிபட்டுள்ளது தனக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தான் சில முடிவுகள் எடுத்துள்ளதாகவும், தனது பணியிடத்தில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

தனது கருத்தில் ரஹ்மான் எந்த இடத்திலும் வைரமுத்து பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஹ்மான் கூறியிருப்பது வைரமுத்துவை தான் என்கிறார்கள். மேலும் இளம் பெண்கள் பலரை தனது பெயரை பயன்படுத்தி வைரமுத்து வளைக்க முயற்சித்திருப்பதால் இனி அவருடன் சேர்ந்து பணியாற்றப்போவதில்லை என்று ரஹ்மான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!