லீனா மணிமேகலையிடம் ஒரே ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்ட இயக்குநர் சுசிகணேசன்...!

Published : Oct 22, 2018, 05:14 PM IST
லீனா மணிமேகலையிடம் ஒரே ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்ட இயக்குநர் சுசிகணேசன்...!

சுருக்கம்

MeToo விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

MeToo விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

 திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறியுள்ளார். இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை இப்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு பகிர்ந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லீனா மணிமேகலையின்  இந்தக் குற்றச்சாட்டுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுசிகணேசன் பதிலளித்துள்ளார். அதில் கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். 

என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை நீதிமன்றம் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள் என காட்டமாக எழுதியிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் சுசிகணேசன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anjana Rangan : வெள்ளை சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் விஜே அஞ்சனா.. அழகிய போட்டோஸ்
Actress Ananya : கருப்பு உடையில் காந்த பார்வையில் ரசிகர்களை இழுக்கும்..'நாடோடிகள்' பட நடிகை அனன்யா போட்டோஸ்