ஒரே நாளில் யூடியூப்பில் அதிக லைக்ஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சாங்ஸ்; என்ன லிஸ்ட் முழுக்க விஜய் பாட்டு தான் இருக்கு!

By Ganesh A  |  First Published Jun 27, 2023, 11:32 AM IST

யூடியூப்பில் வெளியான ஒரே நாளில் அதிக லைக்ஸை அள்ளிய தமிழ் பாடல்கள் பட்டியலில் விஜய்யின் பாடல்கள் தான் டாப் 5 இடத்தை பிடித்து உள்ளன.


அரபிக் குத்து (பீஸ்ட்)

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் தான் யூடியூப்பில் வெளியான 24 மணிநேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற பாடலாகும். இந்த பாடல் ரிலீஸ் ஆன ஒரே நாளில் 22 லட்சம் லைக்குகளை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

Latest Videos

நா ரெடி (லியோ)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடல் தான் அதிக லைக்ஸ் அள்ளிய பாடல்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இப்பாடல் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் 16 லட்சம் லைக்குகளை பெற்றது. இப்பாடலுக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். விஜய் இப்பாடலை பாடியுள்ளார்.

ஜாலியோ ஜிம்கானா (பீஸ்ட்)

நெல்சன் - விஜய் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்காக அனிருத் இசையமைத்த பாடல் தான் ஜாலியோ ஜிம்கானா. விஜய் பாடிய இப்பாடல் யூடியூப்பில் அதிக லைக்ஸ் அள்ளிய பாடல்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இப்பாடல் வெளியான ஒரே நாளில் 15 லட்சம் லைக்குகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஆபாச படத்தால் மாறிய பெயர்... அப்போ மியா கலிபாவின் ஒரிஜினல் பெயர் இது இல்லையா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

ரஞ்சிதமே (வாரிசு)

தமன் இசையில் நடிகர் விஜய் முதன்முறையாக பாடிய பாடல் தான் ரஞ்சிதமே. வாரிசு படத்தில் இடம்பெற்ற இப்பாடலை மானசி உடன் இணைந்து பாடி இருந்தார் விஜய். இப்பாடல் அதிக லைக்ஸ் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 15 லட்சம் லைக்குகளை பெற்றது.

பீஸ்ட் மோடு (பீஸ்ட்)

பீஸ்ட் படத்திற்காக அனிருத் இசையமைத்த பீஸ்ட் மோடு என்கிற தீம் மியூசிக் தான் இந்த பட்டியலில் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தீம் மியூசிக் வெளியான ஒரே நாளில் 11 லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது. இப்படி டாப் 5 இடத்தையும் விஜய்யின் பாடல்கள் தான் யூடியூப்பில் ஆக்கிரமித்து உள்ளன.

இதையும் படியுங்கள்... அரசியலில் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்?... அதுவும் இந்த கட்சியில் இணையப்போகிறாரா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்

click me!