துணை நடிகையுடன் பலமுறை உல்லாசம்... வயசை காரணம் காட்டி கழட்டிவிட பார்த்த நடிகரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 11, 2020, 05:38 PM IST
துணை நடிகையுடன் பலமுறை உல்லாசம்... வயசை காரணம் காட்டி கழட்டிவிட பார்த்த நடிகரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

சுருக்கம்

இந்நிலையில் அந்த பெண் தன்னை தியாகராஜன் ஏமாற்றிவிட்டதாக கூறி மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன், இவர் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கும் நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்த 32 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தன்னை தியாகராஜன் ஏமாற்றிவிட்டதாக கூறி மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

அதில், தியாகராஜன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், அதனால் பலமுறை கர்ப்பமான தன்னை தியாகராஜன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகையிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றையும் வாங்கியுள்ளார். அந்த துணை நடிகை தன்னை விட ஒரு வயது மூத்தவர் என்பதை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். 

இதையும் படிங்க: ஆண் நண்பருக்கு முத்தம்... பர்த்டே பார்ட்டியில் தாறுமாறாக விளையாடும் அமலா பாலின் வைரல் வீடியோ...!

இந்நிலையில் தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை கிடைத்துள்ளது. இதனால் துணை நடிகையுடனான தொடர்பை தியாகராஜன் துண்டித்துள்ளார். இதையடுத்து நேரில் சந்தித்து நியாயம் கேட்ட துணை நடிகையுடனும் தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவேன் என்று துணை நடிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தியாகராஜன் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!