அந்த நடிகையும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழ் சினிமாவிற்கு வந்து இப்போது தான் இரண்டாவது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
புது, புது ஐடியாக்களுடன் நாள்தோறும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் அதில் வாய்ப்பு கிடைத்து, தங்களது திறமையை நிரூபித்து காட்டக்கூடியவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அப்படித்தான் தனது முதல் படத்தின் மூலமாக கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தார் அந்த இளம் இயக்குநர். எந்தவித பிரம்மாண்டமும் இல்லாமல் வெளியான அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதையடுத்து தனது இரண்டாவது படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து களம் இறங்கினார். இயக்குநருக்கு இருட்டு என்றால் பிடிக்கும் போல, அதனால் முதல் இரண்டு கதைகளுமே இருட்டில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அடுத்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, இளம் இயக்குநரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.
அந்த பட ஷூட்டிங்கும் தற்போது முடிந்து, வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு என்று நினைத்தால். கோலிவுட்டில் அந்த இளம் இயக்குநர் மீது புதிய வதந்தி சுற்றுகிறது. தற்போது எடுத்துள்ள படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகைக்கும், இளம் இயக்குநருக்கும் காதல் என்று கூறுகிறார்கள்.
அந்த நடிகையும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழ் சினிமாவிற்கு வந்து இப்போது தான் இரண்டாவது படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்குள் காதல் சர்ச்சையில் சிக்கிவிட்டார். அப்படியெல்லாம் இல்லை... இதெல்லாம் ஒரு வதந்தி என்று ஒதுக்க பார்த்தால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் அருகருகே ரொம்ப குளோஸாக அமர்ந்து கொண்டு சிரித்து, சிரித்து பேசிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி பகீர் கிளப்பி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் உண்மை ஒரு நாளைக்கு வெளிவந்து தானே ஆகனும்.... எல்லோரும் லேடி சூப்பர் ஸ்டார் மாதிரி கெத்தா சுத்த முடியுமா என்ன?