ரம்யா பாண்டியனால் வந்த திடீர் மாற்றம்..! அடுத்த வார பிக்பாஸ் தலைவரான பிரபலம்..!

Published : Oct 31, 2020, 05:48 PM IST
ரம்யா பாண்டியனால் வந்த திடீர் மாற்றம்..! அடுத்த வார பிக்பாஸ் தலைவரான பிரபலம்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும்... ஒட்டு மொத்த போட்டியாளர்களை வழிநடத்த தலைவர் ஒருவரை தேர்வு செய்வது வழக்கம். இதற்காக பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க் வைத்தோ அல்லது, ஒரு வாரம் முழுவதும் பிக்பாஸ் டாஸ்குகளில் நன்கு பர்ஃபாம் செய்த ஒருவரையோ தேர்வு செய்து, தலைவருக்கான போட்டி நடத்தி. அதில் வெற்றி பெறுபவர் அந்த வாரத்தின் தலைவராக அறிவிக்கப்படுவார்.  

தலைவராக தேர்வு செய்யப்படும் நபரை, மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறை.

இந்நிலையில் நேற்றைய தினம் தலைவருக்கான போட்டி நடந்தது. அதில் தலைவர் போட்டிக்காக, பாலா, நிஷா, மற்றும் சோம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திடீர் என பிக்பாஸ் குரல், ரம்யா பாண்டியன் "வெற்றியாளர் யார் என வரிசை படுத்துதல் போது, முதல் இடத்தை பிடித்ததால், அவருக்கு பவர் ஒன்றை தான் கொடுப்பதாகவும், தலைவர் போட்டியில் கலந்து கொள்பவர்களில் ஒருவரோ அல்லது இருவரையோ மாற்றலாம் என கூறினார்.

அதன் படி ரம்யா பாண்டியன் நிஷாவுக்கு பதிலாக சம்யுக்தவின் பெயரை கூறினார். பின்னர் இவர்களுக்கு இடையே பந்துகளை பொறுக்கும் போட்டி நடந்தது அதில் அதிக பந்துகளை எடுத்து சம்யுக்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

கடைசி நேரத்தில், ரம்யா பாண்டியன் செயலால்... அடுத்த வார தலைவராக மாறியுள்ளார் சம்யுக்தா. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jailer 2 Release Date : அலப்பறை கிளப்ப வரும் டைகர் முத்துவேல் பாண்டியன்... ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!