
கோலிவுட் திரையுலகில் பல்வேறு கஷ்டங்களை தாண்டி, தற்போது முன்னணி காமெடியன் என்கிற இடத்தை பிடித்துள்ளவர் யோகிபாபு.
யாமிருக்க பயமேன் திரைப்படத்தில், வாடா வாடா பண்ணி மூஞ்சி வாயா என்கிற வசனம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. இதை தொடர்ந்து அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகினார். தற்போது ஹீரோவுக்கு இணையான முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.
இந்நிலையில் தற்போது நடிப்பை தாண்டி, தான் நடிக்கும் படங்களுக்கு இவரே வசனம் எழுதும் வேலையையும் ரகசியமாக செய்து வருகிறாராம்.
யோகிபாபு கதாநாயகனாக நடித்து வரும், 'தர்மபிரபு' படத்தில் எமன் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது பகுதியின் வசனங்களையும் இவரே எழுதி வருவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து 'கூர்கா' மற்றும் 'ஜோம்பி' ஆகிய படங்களில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.