
அப்பா 8 அடி பாய்ந்தால் கமல் மகள் ஸ்ருதிஹாசன் 80 அடி பாய்ச்சல் காட்டுகிறார். கலையில் மட்டுமல்ல காதலிலும்தான்.. லண்டலின் இருக்கும் காதலுருடன் ஸ்ருதி கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்ருதி ஹாஸன், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலுடன் சில ஆண்டுகளாக காதலில் விழுந்து கசிந்துருகி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஸ்ருதியைத் தேடி இந்தியாவுக்கும், கார்சேலை தேடி லண்டனுக்கும் இருவரும் அடிக்கடி நாடு விட்டு நாடு பறந்து லவ்கீகமாகி வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
ஸ்ருதியின் காதலுக்கு கமல் ஹாஸன் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். மைக்கேல் சென்னை வந்து கமல் ஹாஸனுடன் தங்கிச் சென்றிருக்கிறார். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக ஆதவ் கண்ணதாசனின் திருமணத்தில் எல்லாம் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை காதலருடன் கொண்டாட லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருக்கிறார் ஸ்ருதி. அங்கு மைக்கேலுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி. மைக்கேல் தன்னை சிரிக்க வைப்பது தான் அவரிடம் மிகவும் பிடித்துள்ளதாக கூறும் ஸ்ருதியின் திருமணம் 2019ல் நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.