எமலோகத்தில் தமிழக அரசியல்....கடைசியில யோகிபாபுவும் ஹீரோ ஆயிட்டார்...!

By manimegalai aFirst Published Nov 3, 2018, 12:01 PM IST
Highlights

பேசாமல் பேரை யோகபாபு என்று  மாற்றிக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு காமெடி நடிகர் யோகிபாபு பிஸியோ பிஸி. ஆனால் அவரை அப்படியே விட்டுவிடுவார்களா நம்ம டைரக்டர்கள்.  நல்லாப்போய்க்கிட்டிருந்த யோகி பாபுவின் நாக்கில் தேன் தடவி அவரை கதாநாயக்கியிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன்.

படத்தின் பெயர் ‘எமதர்மராஜா’. சாட்சாத் எமதர்மனாக நடிப்பவர் யோகிபாபுவேதான்.  கதைப்படி எமலோகத்தில் எமனின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த எமனைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. அதில் காமெடி நடிகர் கருணாகரனும், யோகிபாபுவும் போட்டியிட இறுதியில் யோகிபாபு வென்று எமலோகத்தின் தலைவராகிறார். இந்த தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லு, கள்ள ஓட்டு, 20 ரூபாய் டோக்கன் என்று தற்கால தமிழக அரசியல் களம் படத்தில் இடம்பெறுகிறது.

படம் குறித்து இயக்குநர் முத்துக்குமரன் கூறுகையில், “குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சிரிக்க வைக்கும் படமாக தர்மபிரபு தயாராகிறது. சமீபத்தில் தனது உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் குரல் வளத்தாலும் அனைவரையும் தன் ரசிகர்களாக இழுத்து வைத்துள்ள யோகிபாபு எமன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய பலம். முதலில் ஹீரோவாக நடிக்க மிகவும் தயங்கினார். கதை கேட்டவுடன் தான் நடிக்கவே ஒப்புக்கொண்டார்’ என்றார்.

பல கோடி ரூபாய் செலவில் எமலோகம் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.

click me!