
யோகி பாபு எடுத்த அதிரடி முடிவு..! இனி இதை மட்டும் செய்யவே மாட்டாராம்..!
காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் தர்ம பிரபு.இந்த படத்தை பார்ப்பதற்காக தர்பார் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார் யோகிபாபு.
தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் பற்றி தெரிவிக்கும் போது, "உலகத்திலேயே ஹீரோ எமதர்மன் தான்.அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எனக்கு சந்தோஷம். இருந்தாலும் ஹீரோவாக நடிக்கக்கூடாது என நான் நினைக்கிறேன். ஏற்கனவே காமெடியாக நடித்தது போலவே, விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் என ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவே விருப்பப்படுகிறேன்
அவர்களுடன் இணைந்து காமெடி சீன்களில் நடிப்பதே எனக்கு விருப்பம். இனி வரும் படங்களில் நாயகனாக நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார் யோகி பாபு. யோகி தற்போது மேலும் பல படங்களில் கமிட் ஆகி உள்ளதால மிகவும் பிஸியான நபராக வலம் வருகிறார் யோகி பாபு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.