சபரிமலையில் உருவாகியுள்ள ஜோகி பாபுவின் 'சன்னிதானம் பி.ஓ' படத்தின் அப்டேட்!

By manimegalai a  |  First Published Oct 5, 2023, 11:04 PM IST

சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில், 'சன்னிதானம் பி.ஓ' படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 


சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது சன்னிதானம் பி.ஓ திரைப்படம். மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு மற்றும் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி முதன்மை வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது. 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதாசாரதி, "சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து 'சன்னிதானம் பி.ஓ' சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்," என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், "சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். உணர்வுப்பூர்வமான ஒரு கதையை நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வழங்கும்," என்றார். 

Santhanam Net Worth: காமெடி நடிகராக அறிமுகமாகி.. ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு!

வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் ஆகியோர் 'சன்னிதானம் பி.ஓ' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுத, இயக்குநர் அமுதாசாரதி வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் பாரதி.ஏ, படத்தொகுப்பை பொன் கதிரேஷ், மேற்கொள்கிறார். சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் பேனர்களில் மது ராவ் மற்றும் ஷபீர் பதான் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சன்னிதானம் பி.ஓ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்து. 

click me!