Kadali jaya sarathi Death : டோலிவுட்டில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்த கடாலி ஜெய சாரதியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழம்பெரும் நகைச்சுவை நடிகரான கடாலி ஜெய சாரதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. தெலுங்கில் விட்டலாச்சாரியா இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் ஜெகன்மோகினி. இப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது அதில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலம் ஆனார் கடாலி ஜெய சாரதி.
தெலுங்கு திரையுலகில் 372 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
undefined
தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்த கடாலி ஜெய சாரதியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உதயநிதியால் மீண்டும் உயிர்பெறும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..! மாஸான போட்டோவுடன் கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்