நான் டுவெல்த் படிக்கும்போதே அதப் பண்ணிட்டேன் …. பிக் பாஸ் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

Published : Sep 17, 2019, 08:29 PM IST
நான் டுவெல்த் படிக்கும்போதே அதப் பண்ணிட்டேன் …. பிக் பாஸ் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

சுருக்கம்

நான் 12 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன் .. அந்தப் பையன் 9 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தான்… அப்பவே நாங்க டேட்டிங் போனோம் என நடிகை யாஷிகா ஆனந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.  

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் சினிமா மூலம் திரையுலக்குக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படம் தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இவர் சினிமாவில் நடித்து புகழ் பெற்றதைக் காட்டிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  2 நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் சக போட்டியாளராக இருந்த போது மகத்துடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது..

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளரக இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில்  தான் 12ம் வகுப்பு படிக்கும்போது 9ம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் அதில் எந்த தவறும்  இருப்பதாக எனக்கு தெரியவில்லை எனவும் கூறினார்.

மேலும் தன்னை கவர வேண்டும் என்றால் நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும். அதோடு உயரமாக இருப்பவராக இருக்க வேண்டும். முகத்தில் தாடி வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். 

உடலில் டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார். அதே போல் தெலுங்கு நடிகரில் ஒருவரை திருமணம் செய்ய வேணும் நினைத்தால் விஜய் தேவரகொண்டாவை தான் திருமணம் செய்வேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!