’ஒத்தச்செருப்பு’ரிலீஸை ஒட்டி இயக்குநர் ஆர்.பார்த்திபன் செய்த நேர்மையான காரியம்...வீடியோ...

Published : Sep 17, 2019, 06:05 PM IST
’ஒத்தச்செருப்பு’ரிலீஸை ஒட்டி இயக்குநர் ஆர்.பார்த்திபன் செய்த நேர்மையான காரியம்...வீடியோ...

சுருக்கம்

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும்.இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும் இந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது

இந்திய சினிமா சரித்திரத்தில் முதல்முறையாக தான் ஒருவர் மட்டுமே நடித்து பார்த்திபன் இயக்கியுள்ள ‘ஒத்தச்செருப்பு’ரிலீஸாக இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் தன்னைப் போன்றே அதுபோன்ற சாதனைகளை நிகழ்த்திய உலகப்படங்களின் போஸ்டர்களைச் சேகரித்து அதை ஒரு வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும்.இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும் இந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதே தேதியில் சூர்யாவின் காப்பான் படமும் வெளியாகவிருக்கிறது.

இதுகுறித்து பார்த்திபனுக்கு அறிவுரை வழங்கிய விநியோகஸ்தர்கள் கடந்த வாரமான 13ம்தேதி எந்தப்போட்டியும் இல்லாமல் இருந்தது .அப்போது ரிலீஸ் செய்வதை விட்டுவிட்டு இந்த வாரம் சூர்யாவின் காப்பான் படத்தோடு மோதலாமா என்று கேட்டார்களாம். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத பார்த்திபன் திறமையுள்ள பிள்ளைஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் ரிலீஸ் செய்வதோடு மட்டுமின்றி, இப்போது தான் எடுத்திருக்கும் முயற்சி முதன்மையானது அல்ல. இதற்கு முன்பே 13 பேர் முயன்றிருக்கிறார்கள் என்ற தன்னடக்க அறிவிப்புடன் அது தொடர்பான சில படங்களின் போஸ்டர்களையும் வெளியிட்டிருக்கிறார். மத்த படங்களைக் காப்பி அடிச்சிட்டு கம்முன்னு இருக்கிற சினிமாக்காரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு பார்த்திபன்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!