அரசியலில் ஈடுபட திட்டமா? பந்தோபஸ்து விழாவில் பயங்கரமாக பேசிய சூர்யா!

By sathish kFirst Published Sep 17, 2019, 5:35 PM IST
Highlights

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால் ஆர்யா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தை தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த பட ப்ரோமோஷனின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால் ஆர்யா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தை தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த பட ப்ரோமோஷனின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய சூர்யா, நான் நடித்த படங்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாள ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை மனதில் வைத்து நடிக்கிறேன். கதாநாயகனாக எனது முழு அர்ப்பணிப்பையும். உழைப்பையும்  கொடுப்பது மட்டுமே எனது வேலை, வெற்றி தோல்வி எங்கள் கையில் இல்லை என்றார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 3-வது முறையாக "காப்பான்" படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் விவசாயம், அரசியலை பின்னணியாக வைத்து தயாராகியுள்ளது. பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற SPG , NSGயை மையப் படுத்திய படம். இதில், நான் கமாண்டோ கதாபாத்திரத்தில் வருகிறேன். நமது கமாண்டோ படை வீரர்களின் உழைப்பை படத்தில் பார்க்கலாம்.

டெல்லியில் சுமார் 2000 ஏக்கரில் உள்ள NSG தலைமை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி வாங்கி 3 நாட்கள் அங்கு தங்கி, கதாபாத்திரத்துக்கு என்ற மாதிரி என்னை மாற்றிக்கொண்டேன். மேலும் பேசிய அவர், குழந்தைகள், பெண்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள் மிக குறைவாக உள்ளன. எனவே தான் நான், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் படங்களை தயாரித்து வருகிறேன். 

கூடிய விரைவில் நானும் ஜோதிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிப்போம். 14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். கல்வி பற்றிய தெளிவு இருப்பதால் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன். அரசியலுக்கு வர திட்டம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் என்னமெல்லாம்  இல்லை என்று தெரிவித்தார்.

click me!