முதல் பட நாயகனையே திருமணம் செய்யும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை!

Published : Apr 28, 2019, 04:51 PM IST
முதல் பட நாயகனையே திருமணம் செய்யும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை!

சுருக்கம்

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா குட்டிசேரி.  

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா குட்டிசேரி.

இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார். பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம், வெள்ளித்தாயின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.  தற்போது இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் முதல் முதலில் அறிமுகமான  'கிடா பூசாரி மகுடி' படத்தில் கதாநாயகனாக நடித்த ராம்தேவ் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். படப்பிடிப்பிலேயே இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதனால் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது .

இதனால் ரசிகர்கள் பலர் நட்ஷத்திரவிடம்,  திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதற்கு என்ன பதில் அளிப்பர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!