பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் காலமானார்..!

By manimegalai aFirst Published Feb 10, 2021, 2:20 PM IST
Highlights

பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், போன்றவற்றை எழுதி மிகவும் பிரபலமான எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார். 
 

பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், போன்றவற்றை எழுதி மிகவும் பிரபலமான எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார். 

எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம், திருச்சியில் பிறந்தார் வளர்த்தவர். புத்தகம் எழுதுதல் மீது கொண்ட ஆர்வத்தில், சிறு சிறு நாவல்களை எழுத துவங்கிய இவர், பின்னர் ஒரு எழுத்தாளராகவே மாறினார். இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்சி நாடகங்கள், 3 மெகா தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் 3,500க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும், 40 சரித்திரச் சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளில் புகழ்பெற்ற லட்சுமி ராஜரத்னம், செந்தமிழ்ச் செல்வி, சொற்சுவை நாயகி என்ற பட்டங்கள் பெற்றவர். டாக்டர் பட்டமும் வாங்கியவர். நிறைய ஆன்மிக நூல்களும் எழுதியுள்ளார்.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991-ல் எழுத்துக்காகவும், 1993-ல் ஆன்மிகச் சொற்பொழிவுக்காகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2,500 சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இசையாற்றல் மிக்கவராகத் திகழ்ந்த அவர், திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளார்.

78 வயதாகும் இவர்,  வயது மூப்பு காரணமாக, சமீப காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில்,  உடல்நலக் குறைவால் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இவருடைய மகள் ராஜஸ்யாமளா எழுத்தாளராகவும், பரத நாட்டியக் கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!