உலக அளவில் சிம்புவிற்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள்....!!!

First Published Jan 12, 2017, 6:31 PM IST
Highlights

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக   திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு அனுமதி கொடுத்து நடத்துவதற்கு தடை விதித்தால், தடையை  மீறி நடத்த பல இளைஞர்கள்  தயாராக உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் நம் கலாச்சாரத்திற்கு துணையாக  பல கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பொங்கி எழுந்து தொடர்ந்து பல மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று  முதல் ஆளாக ஜல்லிக்கட்டு  தடைக்கு தனது  எதிர்ப்பையும், ஜல்லிக்கட்டுக்கு நடத்த கோரி தனது ஆதரவையும் கொடுத்தார்.

இதனால் தற்போது பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்து இன்று நடைபெற்ற மௌன போராட்டத்திலும் பங்கு கொண்டனர்.

மேலும் இவரது இந்த போராட்டத்தை அறிந்த  ஆஸ்திரேலியா, குவைத், மலேசியா, லண்டன் மற்றும் பல நாடுகளிருக்கும் தமிழர்கள் சிம்புவின் கருத்தை ஆதரித்துள்ளனர்.

மேலும் அவருடன் அங்கிருந்தே போராடவும், அதை வீடியோ கனபெரென்ஸ்  மூலம் மௌன போராட்டம் நடத்தி அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள  சிம்புவையுடன் இணைந்து போராட டைடல் பார்க் அருகே பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட ஐடி  ஊழியர்கள் நிறுவன அனுமதியுடன் இன்று மாலை 5 மணிக்கு கூட இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சிம்பு தனது ட்விட்டர் மூலம் அவர்களுக்கு ரீ ட்வீட் செய்து இந்த போராட்டத்திற்கு ஒற்றுழைத்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

click me!