விஜய் டிவி தாடி பாலாஜி மீது கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார்!

First Published Jul 1, 2017, 3:30 PM IST
Highlights
wife complaint against balaji


குடித்து விட்டு சந்தேகப்பட்டு அடிக்கிறார் , ஏற்கனவே திருமணமானவர் , பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கிறார்கள் என விஜய் டீவி தாடி பாலாஜி மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அது மட்டுமல்லாமல் தாடி பாலாஜி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

இவரது மனைவி நித்யா. இவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளார்.

பாலாஜி-நந்தினி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை வெளியே தெரிந்தது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி, தாடி பாலாஜியின் மனைவி நந்தினி, சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில், என் கணவர் பாலாஜி, என்னை சாதி பெயர் சொல்லி திட்டுவதாகவும், அடித்து உதைப்பதாகவும் என்னை அவர் சந்தேகிக்கிறார் என்றும் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நித்யா இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு  சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நித்யா, கணவர் பாலாஜி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 45 நாட்களுக்குமேல் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்மீது சந்தேகப்படுவதாகவும் நித்யா கூறினார். பலபேருடன் என்னை தொடர்புபடுத்தி பேசி என்னை சித்ரவதை செய்து வருகிறார்.

நான் 4, 5 நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன். நான் வேலை செய்யும் இடங்களுக்கே வந்து வாசலில் நின்று அசிங்கப்படுத்தி வருகிறார்.

குடித்து விட்டு என்னை அடித்து உதைப்பார். பாலாஜி, மீடியா என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எனக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்து வருகிறார்

மாதவரம் காவல் நிலையத்தில் நான் மே மாதம் 23 ஆம் தேதி பாலாஜி மீது புகார் மனு அளித்திருந்தேன். அது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவே, நான் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் என்று நித்யா கூறினார்.

click me!