விஜய் அவார்ட்ஸ்னாலே கோல்மால் தானா? புலம்பும் ரசிகர்கள்;

 
Published : Jun 04, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
விஜய் அவார்ட்ஸ்னாலே கோல்மால் தானா? புலம்பும் ரசிகர்கள்;

சுருக்கம்

why this much partiality fans raised question against this channel

விஜய் குழுமம் நடத்தும் 10வது விஜய் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜய் விருது வழங்கும் விழா நேர்மையாக நடப்பதில்லை என ஒரு எண்ணம், மக்கள் மனதில் வெகு காலமாகவே இருந்துவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. இந்த ஆண்டு நடை பெற்ற விருதுவழங்கும் விழாவும்.

இந்த விழாவில் நயன்தாராவிற்கு அறம் திரைப்படதிற்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகை மற்றும் ஃபேவரைட் நடிகை என இரண்டு விருதுகளை வென்றிருக்கிறார் நயன்தாரா. இதனால் நயன்தாரா ரசிகர்கள் சந்தோஷமடைந்தாலும், எத்தனையோ நடிகைகள் இந்த ஆண்டில் சிறப்பாக நடித்திருந்தனர், அவர்களில் யாருக்காவது ஒரு விருதை கொடுத்திருக்கலாம், என சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சி வழக்கமாக சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கும் பெஸ்ட் எண்டெர்டைனர் விருதை, இந்த ஆண்டு தனுஷிற்கு கொடுத்திருக்கிறது. ஆனால் தனுஷின் படம் எதும் இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக போகவில்லையே? வி.ஐ.பி-2 கூட கொஞ்சம் சருக்கல் தானே? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர் ரசிகர்கள்.

சிறந்த பாடகருக்கான விருதை அனிரூத்துக்கு கொடுத்த போது, அவரே அந்த விருதை மேயாத மான் படத்தில் “எங்க வீட்டு குத்து விளக்கு பாடலை பாடியவருக்கு” அர்ப்பணித்ததும் குறிப்பிடத்தக்கது. இது போல சில நல்ல படங்களும், சில திறமையான நடிகர், நடிகைகளும், விருதுக்கக பரிந்துரை செய்யப்படவில்லை எனும் கருத்தும், மக்கள் மனதில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்த ஆண்டு விருது வழங்குதலில் அந்த அளவு பாரபட்சம் இல்லை என்பதும் சிலரின் கருத்து. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்