"மாஸ்டர்" படத்தில் வில்லனாக நடிப்பது ஏன்?.... மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஓபன் டாக்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 5, 2020, 3:46 PM IST
Highlights

"ஓ மை கடவுளே" பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என விளக்கம் அளித்துள்ளார். 

சினிமாவில் ஹீரோக்களுக்கு பின்னால் நிற்பதில் தொடங்கி, நண்பன் கேரக்டர்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டாலும், ஹீரோ கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லனாகவும் அசத்தி வருகிறார். 

அதிலும் விதவிதமாக வெரைட்டி காட்டி வருகிறார். "பேட்ட" படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பின்னியெடுத்தார். விக்ரம் வேதாவில் நெகட்டீவ் கேரக்டர் என்று சொன்னாலும் யாரும் நம்ப முடியாத அளவிற்கு நடிப்பில் தும்சம் செய்தார். தற்போது மக்கள் செல்வன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் படம் "மாஸ்டர்". இதில் விஜய்க்கு வில்லனாக களம் இறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. 

அதுமட்டுமின்றி தெலுங்கில் வெளியான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'சைரா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள "ஓ மை கடவுளே" படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகராக வளர்ந்த பின்னும் இப்படி சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கிறாரே என மக்கள் செல்வன் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். 

இந்நிலையில், "ஓ மை கடவுளே" பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து விவரித்த விதம் மிகவும் பிடித்திருந்ததாம். அதனால் தான் இப்படிப்பட்ட நெகட்டீவ் ரோலை மிஸ் செய்துவிடக்கூடாது என்று  உடனே ஓகே சொல்லிவிட்டாராம். 
 

click me!