ஆர்.கே.நகர் டைட்டில் வைத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்!

By manimegalai aFirst Published Mar 30, 2019, 6:58 PM IST
Highlights

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. கடந்த வருடம் துவங்கப்பட்ட இந்த படத்தின்   படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 
 

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. கடந்த வருடம் துவங்கப்பட்ட இந்த படத்தின்   படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு 'ஆர்.கே.நகர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து இயக்குனர் சரவணராஜன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மக்களிடம் டைட்டில் உடனே ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த டைட்டில் வைக்கப்பட்டதாகவும், மற்றபடி இந்த படத்தில் ஓரிரு அரசியல் நையாண்டிகள் காட்சிகள் இருக்குமே தவிர, இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை என்றும் சரவணராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை எப்போதுமே குழந்தையாகவே தெரிவார்கள். ஆனால் அவர்கள் வெளியே எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியாது. எனவே இந்த படத்தை ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டிய படம் என கூறியுள்ளார்.

இந்த படத்தில், மேயாத மான் படத்தை தொடர்ந்து வைபவ், கதாநாயகனாகவும், 'சென்னை 28 ' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த  சனா அல்தாப் கதாயாகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

click me!