
நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களும், வாக்காளர் மையத்திற்கு வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு வாக்களிக்காதது, குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. காரணம்... சமீபகாலமாகவே நடிப்பை தவிர்த்து , அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றியும் அதிகம் பேசி வரும் சிம்பு, குடிமகன்களின் தலையாய கடமையான வாக்களிக்கும் உரிமையை ஏன் செய்யவில்லை? என சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறுகியில், சிம்பு ஒருபோதும் வாக்களிக்க தவறியதே இல்லை. ஆனால் இம்முறை அவர் வெளிநாட்டில் உள்ளதால், அவரால் வர முடியவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.